Thursday, January 21, 2010

எது பிடிக்கும்!

எனக்கே எனக்கான கால்கள் பிடிக்கும் !!
யாரும் இல்லா வீதியில்
நடக்கின்ற தனிமை பிடிக்கும்!
தாயின் மடியில் உறங்க பிடிக்கும்
தந்தையின் கோவம் பிடிக்கும்!
இரவில் உறங்கும் வீதி பிடிக்கும்!
தனிமையில் சிரிக்கும் நிலவு பிடிக்கும்!
அண்ணன்ணின் திறமை பிடிக்கும்!
தங்கையின் தைரியம் பிடிக்கும்!
நாளை என்ற விடுகதை பிடிக்கும்!
நண்பர்களின் தோழமை பிடிக்கும்!
எனக்கே எனக்காக பிறந்தவனின்
நேசம் பிடிக்கும்...
அவனது மடி தூக்கம் பிடிக்கும்....
என் தலை கோதும் விரல்களை பிடிக்கும்....
என் மழலையின் சிரிப்பு
தவழும் அழகு....
முதலில் உச்சரிக்கும் வார்த்தை...
எடுத்து வைக்கும் முதல் அடி..
மழலை குரலில்
வெளிப்படும் தாய்மையின் தாக்கம்
இவை யாவும்
இப்பிறப்பில் நான் விரும்புபவை...