Tuesday, October 13, 2015


ஹர்ஷிகா :
எங்கள் அன்பின் அடையாளம்
எங்கள் வாழ்கையின் ஆணிவேர் ,
எங்கள் அழகு தேவதை ..
எங்கள் வீட்டின் வசந்தம் ..
எங்களின் எதிர்காலம் , நிகழ்காலம் …
எல்லாமும் அவள் தான் ...

அவள் முகம் பார்த்து சிரிக்கையில்
துன்பம் எல்லாம்
தடம் தெரியாமல்
அழிந்து போகும்!

நடக்கும் அழகு
தோகை மயிலும்
தோற்று போகும்,
எங்கள் தங்க மயில்
முன்பு …

செய்யும் குறும்புகளில்
மாய கண்ணனும்
தோற்று போவான்
எங்கள் மகளின் முன் ..

அவன் அன்று வெண்ணெயை
திருடி உண்பதுபோல்
இவள் “butter” யை
திருடி உண்கிறாள் …

நினைத்ததை
சாதிக்கையில்
உள்ளம் கலங்குகிறது ..
முலைக்கையிலே
இவ்வளவு பிடிவாதம்
அவளின் கோவம்
கூட அழகு :)