Saturday, April 20, 2013



பெண்ணை தொடும்
காம பிசாசுகளே...
ஒரு முறை யோசியுங்கள்..
எதிரில் இருக்கும்
பெண்
உன் தாயோ
சகோதிரி
அல்ல…

இவர்களை தொட
முடியும் எனில்
நீ உன் கண் முன்
இருக்கும் பெண்ணை
தொடு...

ஆனால்
ஒன்று மட்டும்
உண்மை
அவளும்
ஒரு தாய்க்கு
பெண்
உன்னை போல்
ஓர் தமயனின்
சகோதிரி...
அல்ல
எவனோ ஒருவனின்
மனைவி ஆவாள்...

ஓர்
பெண்ணின் வயற்றில்
பிறந்து..
உன்னை சுமந்த
தாயை
இழிவு படுத்துகிறாய்...
கற்பை கலங்க
படுத்திவிட்டாய்...
அது மட்டுமல்ல
உன்னை
மனிதனாய்
கருதும்
எவனும்
எவளும்
மனிதனாக
வாய்ப்பில்லை..

உன்னை
இந்த பூமியில்
ஜனிக்க செய்த
இறைவனையும்
கேள்வி கேட்க
விழைகிறேன் ???

இப்படி ஒருவனை
படைத்து
மண்ணில்
பல பெண்ணை
அசிங்க படுத்தும்
இவனுங்களுக்கு
நீ தர போகும்
தண்டனை என்ன???

பெண்ணை
இழிநிலை படுத்தும்
இவர்களை
எதில் சேர்ப்பது..
கண்டிப்பாக மனிதன் இல்ல??
மிருகங்களுடனும்
சேர்த்து
அவர்களை
இழுவுபடுத்த
விரும்பவில்லை…

பெண்ணிற்கு ( குழந்தை முதல்...)
என் இந்த
நிலை...
என் இந்த
சாபக்கேடு ...

யார் செய்த
பிழை ???

இதற்கு என்ன
வழி??