Tuesday, September 18, 2012

மலராத மத்தாப்பு !

காலை கதிரவன்
தோன்றும் முன்
ஆயிரம் கனவுகளுடன்
துயில் எழுவேன்!!!

என்னை பெற்றெடுத்த
தாயோ..

கையில் சாப்பாட்டை
திணித்து
வழி அனுப்புவாள்..
பள்ளிக்கு அல்ல
பள்ளிக்கு எதிரில்
இருக்கும்
இரும்பு பட்டறைக்கு!!!

காலை முதல்
சுத்தியால்
உடைத்ததின் பயனாய்
என் கைகள்
காய்ந்து கொப்புளித்து
சிரிக்கிறது...

இப்படியான கையை
கொண்டு
தாய் கொடுத்தனுப்பிய
பழய கஞ்சியை
உன்ன கஷ்டப்படுகிறேன்!!!
என் கண்ணீரும் சேர்ந்து
என் கஞ்சியை
ருசி படுத்துகிறது...

கண்ணீர் மல்க
எதிரில் இருக்கும்
பள்ளியை பார்கிறேன்!!!
அங்கு அவர்களின் தாய்
பாசமாய் ஊட்டும்
உணவை
உன்ன மறுக்கிறார்கள்...

எத்தனை பேர்க்கு
இந்த வாய்பு
கிட்டுகிறது...

இப்படி அந்தி
சாய்ந்தும் வேலை
செய்து முடித்து..
வீடு திரும்பும்
போது
பகலவன் மறைந்து
சந்திரன் தோன்றியிருப்பான்..

சந்திரனை கண்ட
ஆனந்தத்தில்
என் தாயை
காணும் ஆவலில்
விரைந்து செல்கிறேன்
கையை கண்டு
கண்ணீர் சிந்துவால்..
அது என் கை புன்னையும்
மனபுன்னையும் சேர்த்து அத்தும்
என்று... அதன் ஊடே
அவளின் பாசத்தோடு
எனக்கு ஊட்டும்
சோறு ....
என கனவு கண்டு
வீடு செல்கிறேன்
அங்கு என் தாயோ
வேலையின் களைப்பில்
உறங்குகிறாள்

கண்ட கனவு
கனவாகி போனது
எண்ணி
அழுவதா சிரிப்பதா???

அல்ல உழைக்கும்
எங்களை
பழிவாங்கும்
இறைவா....

மலராத மத்தப்பாகி
கருகும் என்னை
நீ கொண்டு சேர்
உன்னிடம் ....
Written in 2004:)

Sunday, September 16, 2012

நானும் தோற்கிறேன்

யாவரும் செய்யும்
அதே இழி செயல் !!

மண்ணை விட்டு
  பொன்னை தேடி 
செல்கிறேன்...

என் மனதின்
  கேள்வி
முன்
நானும் தோற்கிறேன் !!!

இந்திய மண்ணை
பிரியும் போது !

கண்ணில் குளம்
  கட்டுகிறது
குடும்பத்தை 
பிரியும் போது!

ஆனால்
வழி என்று 
ஏது?????

அன்பான குடும்பம்
  ஆழமான நட்பு 
என்று அழகாய்
பிணைக்க பட்ட 
நான்..

இனிமேல்
  அதை உணரப்போவது
  நினைவில் மட்டுமே!!
என்ற வலி 
நெஞ்சில் நெருஞ்சி முல்லாய்
தைக்கிறது...

நிற்க நேரமின்றி
அனுதினமும்
யாருக்காக
தவம் கிடக்கிறாய்
அலை மகளே
உன்னவனின்
கடைக்கண்
பார்வைக்காகவா????

அலை ..

அமைதியாக
என் பாதத்தை
முத்தமிட்டு செல்கிறாய் ..

என்னவன்
என் அருகில்
இல்லாத தைரியத்தில் ….

கணவு

பல நாள் கணவு
நினைவானது போல்
எல்லோரும் ஏங்கி தவித்த
கோடை மழை …

மழை காதலனை
காணமல்
ஏங்கி தவிக்கவைத்த
பூமி காதலியை
பொய்க்காமல் அரவணைக்க
இறங்கி வருகிறான் …

அவளும்
இரு கரம் கூப்பி
வணங்கி வரவேற்கிறாள்
மழை என்னும்
அவள் காதலனை …

பயணம்

அதிகாலை பொழுது
பனி புகை சூழ்ந்த
ரம்மியமான நேரம் ..
சூரியன் சிரிக்காத விடியல்
பசுமையான மலை தொடர்
எப்பக்கம் திரும்பினும்
பூக்கள் மலர்ந்து
சிரிக்கிறது …
பனி துளிகளுடன் …

இதன் ஊடே ஆன
மலைப்பாதை பயணம் ..

இயற்கையின் ரசிகர்களுக்கு
தெவிட்டத அமுதம் ..
உடலை தீண்டும்
குளிர் காற்று...
மனதை தீண்டும்
பசுமை …

பார்ப்பவர் அனைவரையும்
கவிஞன் ஆக்கும்
அழகு ..

மலை குன்றுகளின்
மத்தியில் வீடுகள்
சரிந்து
வளர்ந்து இருக்கும்
காய் கனிகள்

குளிருக்கு இதமாய்
நாயர் சாய் ..
மனதை
வருடும்
தென்றல் ..

சில்லன
முகத்தில்
மோதும்
பனி சாரல் ..

காதை
தீண்டும்
மெல்லிசை ..

பணியால்
பூத்த
முகத்தின்
செம்மை …

பயணம்
நீலட்டும்
என பிராத்திக்கும்
மனது ...
ஏன் என்று கேட்டால்
கவர்ந்திழுக்கும்
சுற்றுசுழல்
ஒரு புறம் இருக்க ..
மறுபக்கம்
என் உள்ளம்
கவர்ந்தவனுடன்
கை கோர்த்து
தோல் சாயந்து
நடந்து செல்லும்
அச்சில மணி
நேரம்
என்றும்
என் மனதின்
மூலையில்
பசுமையாய்
நிலைத்திற்கும் ….

Tuesday, September 11, 2012

சிசு கொலை

பிறந்தது
பெண் என்று
கொல்ல துடிக்கும்
உன் புத்திக்கு
எட்டவில்லையா ..
நீயும்
பெண்
உன்னை
சுமந்தவளும்
பெண் என்று …

கேட்டால்
வறுமை …
உன் வறுமை
நீ அறிந்தது …

பிறர் சொல்லி
அறியப்படபோவது
இல்லை ..

அப்படி இருக்கையில்
நீ உன் சந்தோஷத்துக்காக
கருவுற்று …
பெண் என்று
அழிக்கிறாய் !

ஆண் பிள்ளை
பிறந்து இருப்பினும்
வளர்த்து இருப்பாயே
அப்போது எங்கு சென்றது
உன் வறுமை …

இல்லை இல்லை …
வறுமை தான்
ஆண் /பெண்
எதுவாயினும்..
என்று சொல்வாயனில் ..
கேட்டுக்கொள் ..

நீ ஒரு
சுயநலவாதி …
உன் சந்தோஷத்திற்காக
வாழ்பவள் ...
நீ திரும்பவும்
கருவுற்று …
அழித்துக்கொண்டே
இருப்பாய் …
பல சிசுக்களை ..
.
உன்னை
போல் ஒருத்தி
இப்பூமிக்கு
என்றும்
பாரமாய்
நம் எல்லோரையும்
சுமக்கும் நம்
பாரத தாய்க்கு
ஒரு அவமான
சின்னமாய்
விளங்குவாய் ...
என்பதில்
சந்தேகம் இல்லை
.. அத்தகு பாவ
செயலுக்கு நீ

உன்னையே மாய்த்துகொள்...
பல சிசுவேனும்
மிஞ்சும்!!!!


என் தாய்!!!!

நான் அறிந்த 
என் தாய்க்கு 
நாங்கள் தான்
உலகம்!!!

அவளது உலகத்தில்
நால்வர் தான்!!

அப்பா அண்ணன்
  நான் என் தங்கை..
தெய்வம் கூட
எங்களுக்கு 
பிறகு தான் 

எங்கள் கண்களால்
  உலகை 
கண்டவள்...

இன்று 
விதியின் 
வலியால் 
உலகை பார்க்கிறாள்
  அவளது 
கண்களால்...

சற்றே வித்தியாசமாய் 
இருப்பினும்
பழகி கொண்டு
கற்று தேர்கிறாள்..

எங்களின் நலன் 
கருதி..

இப்படியான அன்பு
  கிடைக்கபெற 
நாங்கள் செய்த 
புண்ணியம் 
புலப்படுகிறது..
இப்பிறவி 
அல்லாமல்
முர்ப்பிரவி பயனும்!!!