Thursday, September 29, 2011

பெண்கள் சத்தம் போட்டு சிரித்தால்
ஊர் ஆயிரம் சொல்லுமாம்.....

என்ன ஆயிரம் என்று கேட்டல்
பதில் இல்லை யாரிடமும்...

என்னிடம் உள்ளது அதற்கான விடை....

பழங்காலத்தில் பெண்களுக்கு வகுத்த நியதி
மீற மனம் வரவில்லை நம் தாய்க்கு

மீறி சிரித்தால்..
நம்மை பெற்ற தாய் வேதனை படுகிறாள் ஒருபுறம்
ஊர் தம் மகளை ஏசும் என்று
இன்னும் ஒரு மனது துள்ளி தவிக்கிறது
தன் பெண்ணின் சிரிப்பு என்றும் நிலைக்க எண்ணி...

அதன் பொருட்டு அவளது சிரிப்புக்கு
சிறை வைகபடுகிறது அவளையும அறியாமல்!!!

இப்படி ஊருக்காக ஒரு முகமும்
நமக்காக என்னொரு முகம் ஏன்???

நாமாவது பெண்களை எங்கும் எப்போதும்
சிரிப்புடன் இருக்க வைக்க முயலுவோம்!!!
அழுக தெரியவில்லை
பிணமாய் கிடக்கும் தந்தையை பார்த்து …
இரண்டு வயது குழந்தைக்கு …
இதற்கு பேர் தான் விதியோ ...


அப்பா தூங்கறார்
என்று எண்ணி விளையாடும்
அச்சிசுவுக்கு
யார் புரிய வைப்பது
அவர் இனி என்றும் விழிக்க போவது இல்லை என்று!!!!!!!!