Thursday, December 1, 2011

நிலா:

நிலா:
அன்று அம்மா சோறு ஊட்ட காட்டிய அதே முழுநிலவு
அன்றும் இன்றும் என் கண் முன்னே தெரிகிறது....

மாறியது நிலவும் அல்ல...
அம்மாவும் இல்லை
நானும் அல்ல

அப்படியானால் மாறியது யார் ?????
மாறியது
அன்று என் தாய் காட்டிய நிலவில்
தெரிந்த முகம் அறியா பட்டியின் முகம்
இன்று தெரிவதோ
என் உள்ளம் கவர்ந்தவனின்
முத்துப்பல் சிரிப்புடன் தோன்றும்
அழகிய முகம்!!!!!!!

துயில்

இமை மூடி
உறங்க துடிக்கிறேன்
மூடிய விழிகளின்
என்னவனின் உருவம் தெரியுமா என்று ???????
=====================================
என்னவனின் உருவம்
கண்ணில் தோன்ற
தூக்கம் என்னும் ஆயுதத்தை
ஏந்தி நிற்கும் அபலை பெண்!!!!!!!!

துயில்

கண் மூடினால்
உனை பார்க்க முடியும்
உணர முடியும்
என்று யாரோ சொன்னதற்காக
இன்று வரை
தினமும் கண் மூடி கிடக்கிறேன்
என்னை கவர்ந்த
உன் முகம் தெரியுமா என்று....