உனக்கான ஆசை
என்னவென்று கேட்டேன் ..
நீயும் சொன்னாய்
நம் வீட்டின்
சந்தோஷம் என்று..
அப்படியான என்
இனிய தமயனின்
பிறந்ததினம் இன்று....
என்றும் பிறர்
சந்தோஷத்தில்
மகிழும் உனக்கு
எல்லா சந்தோஷங்களும்
கிடைக்க பெற..
வேண்டும் நம்
பெற்றோரின்
அன்பும் ஆசியும்...
உன்னை சுற்றி
சிரித்து வலம் வரும்
சிறார்களின்
இன்முகமும்...
உனக்கு எங்கும்
எதிலும்
வெற்றி உனதாகபெற
வாழ்த்தும்
உனது அன்பு தங்கை...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகாஷ்!!!
Written on Nov 10th 2012
பெண்:
என்ன தவம் செய்தேனோ ....
பெண்ணாய் பிறப்பதற்கு ....
பிள்ளையை சுமப்பதற்கு!
பிறக்கும் பிள்ளைக்கு
தான் போகும்
இடம் தெரியாது....
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது
பிரிவு .....
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......
தோழி
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை.... ..
பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை........ .
என்றாவது பிரிய நேர்ந்தால்....
சந்தோஷமாக ஏற்பேன் ...
மரணத்தை உன் மடியினில்....
தந்தை
என் கண்ணில்
தூசு என்றால்
உன் கண்கள் கலங்குகின்றது ...
எனக்கு காய்ச்சல் என்றால்
உன் உடம்பு இளைக்கிறது....
எப்படியாக என்னுள்
நிறைந்து இருக்கும்
என் தந்தையே ....
உன்னை போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை புரட்டுகின்றன்
வார்த்தை தேடி......