Monday, April 26, 2010

குழந்தையும் தெய்வமும்

இரண்டு முறை பிரகாரம்
சுத்திவிட்டு கால்வலிக்கிறதென்று
குழந்தை
சாய்ந்தது அரச மர நிழலில்...
கோவிலைச் சுற்ற
அழைத்த அம்மாவின்அழைப்பை
நிராகரித்தபடி.
புரியாமல்கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள் தாய் ....
குழந்தையிடம் கெஞ்சுகின்றசுகத்தை
கடவுளிடம் பெறமுடியாதென
அவளுக்கு சொல்ல
எழுந்தேன் பிரகாரத்தைவிட்டு!!

Friday, April 23, 2010

அன்பு தோழா..

அன்பு தோழா..
நட்பு என்னும் வட்டத்துக்குள்
ஒன்று சேர்ந்த நாம்
என்றும் எப்பொழுதும்
எவரின் கலங்கதிற்கும் இடம் தராமல்
தோள் சாய தோழனாய்
கண்ணீரை துடைக்கும் நண்பனாய்
சிரித்து பேசி மகிழ....
துயரை பகிர்ந்து கொள்ள
வாழ்வின் இறுதி வரை
உடன் வருவாய் என நம்பும்
அன்பு தோழி!!!

Thursday, April 22, 2010

Rasithathu!!

பேருந்தின் மேல்கம்பியை
பிடித்து வந்த அழகான
மருதாணி
விரல்களுக்குரிய முகம் தேடி
தவிப்பும் துக்கமுமாய்

Monday, April 19, 2010

முன்னேறுமா இந்தியா..

உறங்க கூரை இல்லை...
விரிக்க கிழிந்த பாயும் இல்லை...
அவதியுறும் மக்களோ ஏராளம்
இவர்களது இருப்பிடம்
பகலில் சூரியன் ...
இரவில் சந்திரன்...

Sunday, April 11, 2010

இன்று தான் கவனிக்கிறேன்
என் கண்ணீரை!!!
நீ திரும்பி வந்துடன்!!
என் மனம் அழும் ஓசை
எனக்கே கேட்கவில்லை...
நீ பிரிந்து சென்ற நாள் முதல்...
மூச்சு விட்டுக்கொண்டிருபவன் எல்லாம்
மனிதன் இல்லை
முயற்சி செய்து கொண்டு இருப்பவன்
தான் மனிதன்

காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!!!
எழுதியவர் பா.விஜய்!!