Monday, October 1, 2012

என்னை தீண்டிய மழை!!!

பேருந்து ஜன்னலில்
சாரலாய்
என்னை தீண்டிய
மழையை

கிழிறங்கி
நனைய
கனா காண்கிறேன்

அது என்னை
பொய்க்க போகும்
கானல் நீர்
என்று தெரியாமல் ..

நான் இறங்கும்
நிறுத்தத்தில்
கால் வைக்கிறேன் ..

தென்றலாய்
சீண்டிய சாரல்
இப்போது
அனலாய்
என் மனதை
சுட்டது ..

மழைக்கு கூட
என் சந்தோஷத்தில்
விருப்பம் இல்லை …

அல்ல இச்சின்ன
சந்தோசம் கூட
இவளுக்கு கூடாது
என்று செய்ய
பட்ட சதியா
அல்ல என் விதியா…

எதுவாயினும்
மலரைப்போல
வாடிய என் மணம்
திரும்ப மலரப்போவது
இல்லை ..

அன்பு முகம்

பனி
மூட்டத்தின் நடுவே
தேடி பார்கிறேன்
எனக்காக பிறந்தவனின்
அன்பு முகம்
தெரிகிறதா என்று !

மரம் செடி!!!

மழை கள்ளனின்
வரவால்
வெட்கத்தில்
தலை தாழ்த்தி
சிரிக்கிறது
தன்
அன்புக்குரியவனின்
தீண்டலால்..

மானம் காக்க
அறிமுகப்படுத்த
துபட்டா!!!!!

இன்று
நம் சமுதாயத்தில்
சூரிய கதிர்வீச்சுகளை
காக்கும் கவசமாய்
பயன்படுத்த பட்டு
வருகிறது....

அழகை காக்க
என்னும்
பெண்களே
உங்கள் மானத்தின்
விலை இவ்வளவு
தானா...

இன்றும் நாட்டின்
எதோ ஒரு முலையில்
நம் பண்பாடு
காக்கப்படுகிறது
என்று பெருமை
படும் என்னால் ..

இது நிலைக்குமா
என்று கேட்டால்
இல்லை என்று
சொல்லுவேன்...

நம் கலாச்சாரம்
சீர் கேட்டு
காலங்கள்
பல உருண்டோடின....

முக அலங்காரத்தில்
கவனம் செலுத்த
மெனக்கிடும் செலவில்..

கிழிந்த உன்
பள்ளி சீருடையின்
கிழிசலை
சரி செய்யலாம்..

சொன்னால்
சொல்பவரையும்
வெறுக்கும் வயது
இது...

பாட புத்தகத்தில்
படிய வேண்டிய

கண்கள் ..
சுற்றி இருக்கும்
ஆடவர்களையும்
விமர்சிப்பதிலும் ..
கவரும் திரை
நாயகர்களை
வர்ணிப்பதற்கும்...
கதாநாயகிகளின்
ஆடை அணிகலன்களின்
பெருமை சிறுமைகளை
அலசி ஆராய்வதில்
செலுத்தும் அக்கறையை
படிக்கும் புத்தகத்திலும்
உன் பெற்றோரின்
நலன்களில்
அக்கறை
கொண்டு செய்தல்
வருங்கால சமுதாயம்
இளைஞர் கையில்..

அல்லையேல்
சமுதாய சிர்கேடின்
ஆரம்ப கட்டத்தில்
இருக்கும் நாம்
விரைவில் கெட்டழிய
உள்ளது என
என் மனது
ஆணித்தரமாக நம்புகிறது...

தந்தை

என் கண்ணீரின்
வலியும்
வேதனையும்
உணரும் ஜீவன்
இவ்வுலகில்
என்றும்
அவர் ஒருவர்
மட்டுமே...

இவ்வுலகில்
ஜெனித்த நொடி
முதல்
இச்சனம் வரை
எனது
உணர்வுகளை
பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
வாழ்ந்துவரும்
தந்தையை
போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை
புரட்டுகின்றேன்
வாரத்தை தேடி ....

Tuesday, September 18, 2012

மலராத மத்தாப்பு !

காலை கதிரவன்
தோன்றும் முன்
ஆயிரம் கனவுகளுடன்
துயில் எழுவேன்!!!

என்னை பெற்றெடுத்த
தாயோ..

கையில் சாப்பாட்டை
திணித்து
வழி அனுப்புவாள்..
பள்ளிக்கு அல்ல
பள்ளிக்கு எதிரில்
இருக்கும்
இரும்பு பட்டறைக்கு!!!

காலை முதல்
சுத்தியால்
உடைத்ததின் பயனாய்
என் கைகள்
காய்ந்து கொப்புளித்து
சிரிக்கிறது...

இப்படியான கையை
கொண்டு
தாய் கொடுத்தனுப்பிய
பழய கஞ்சியை
உன்ன கஷ்டப்படுகிறேன்!!!
என் கண்ணீரும் சேர்ந்து
என் கஞ்சியை
ருசி படுத்துகிறது...

கண்ணீர் மல்க
எதிரில் இருக்கும்
பள்ளியை பார்கிறேன்!!!
அங்கு அவர்களின் தாய்
பாசமாய் ஊட்டும்
உணவை
உன்ன மறுக்கிறார்கள்...

எத்தனை பேர்க்கு
இந்த வாய்பு
கிட்டுகிறது...

இப்படி அந்தி
சாய்ந்தும் வேலை
செய்து முடித்து..
வீடு திரும்பும்
போது
பகலவன் மறைந்து
சந்திரன் தோன்றியிருப்பான்..

சந்திரனை கண்ட
ஆனந்தத்தில்
என் தாயை
காணும் ஆவலில்
விரைந்து செல்கிறேன்
கையை கண்டு
கண்ணீர் சிந்துவால்..
அது என் கை புன்னையும்
மனபுன்னையும் சேர்த்து அத்தும்
என்று... அதன் ஊடே
அவளின் பாசத்தோடு
எனக்கு ஊட்டும்
சோறு ....
என கனவு கண்டு
வீடு செல்கிறேன்
அங்கு என் தாயோ
வேலையின் களைப்பில்
உறங்குகிறாள்

கண்ட கனவு
கனவாகி போனது
எண்ணி
அழுவதா சிரிப்பதா???

அல்ல உழைக்கும்
எங்களை
பழிவாங்கும்
இறைவா....

மலராத மத்தப்பாகி
கருகும் என்னை
நீ கொண்டு சேர்
உன்னிடம் ....
Written in 2004:)

Sunday, September 16, 2012

நானும் தோற்கிறேன்

யாவரும் செய்யும்
அதே இழி செயல் !!

மண்ணை விட்டு
  பொன்னை தேடி 
செல்கிறேன்...

என் மனதின்
  கேள்வி
முன்
நானும் தோற்கிறேன் !!!

இந்திய மண்ணை
பிரியும் போது !

கண்ணில் குளம்
  கட்டுகிறது
குடும்பத்தை 
பிரியும் போது!

ஆனால்
வழி என்று 
ஏது?????

அன்பான குடும்பம்
  ஆழமான நட்பு 
என்று அழகாய்
பிணைக்க பட்ட 
நான்..

இனிமேல்
  அதை உணரப்போவது
  நினைவில் மட்டுமே!!
என்ற வலி 
நெஞ்சில் நெருஞ்சி முல்லாய்
தைக்கிறது...

நிற்க நேரமின்றி
அனுதினமும்
யாருக்காக
தவம் கிடக்கிறாய்
அலை மகளே
உன்னவனின்
கடைக்கண்
பார்வைக்காகவா????

அலை ..

அமைதியாக
என் பாதத்தை
முத்தமிட்டு செல்கிறாய் ..

என்னவன்
என் அருகில்
இல்லாத தைரியத்தில் ….

கணவு

பல நாள் கணவு
நினைவானது போல்
எல்லோரும் ஏங்கி தவித்த
கோடை மழை …

மழை காதலனை
காணமல்
ஏங்கி தவிக்கவைத்த
பூமி காதலியை
பொய்க்காமல் அரவணைக்க
இறங்கி வருகிறான் …

அவளும்
இரு கரம் கூப்பி
வணங்கி வரவேற்கிறாள்
மழை என்னும்
அவள் காதலனை …

பயணம்

அதிகாலை பொழுது
பனி புகை சூழ்ந்த
ரம்மியமான நேரம் ..
சூரியன் சிரிக்காத விடியல்
பசுமையான மலை தொடர்
எப்பக்கம் திரும்பினும்
பூக்கள் மலர்ந்து
சிரிக்கிறது …
பனி துளிகளுடன் …

இதன் ஊடே ஆன
மலைப்பாதை பயணம் ..

இயற்கையின் ரசிகர்களுக்கு
தெவிட்டத அமுதம் ..
உடலை தீண்டும்
குளிர் காற்று...
மனதை தீண்டும்
பசுமை …

பார்ப்பவர் அனைவரையும்
கவிஞன் ஆக்கும்
அழகு ..

மலை குன்றுகளின்
மத்தியில் வீடுகள்
சரிந்து
வளர்ந்து இருக்கும்
காய் கனிகள்

குளிருக்கு இதமாய்
நாயர் சாய் ..
மனதை
வருடும்
தென்றல் ..

சில்லன
முகத்தில்
மோதும்
பனி சாரல் ..

காதை
தீண்டும்
மெல்லிசை ..

பணியால்
பூத்த
முகத்தின்
செம்மை …

பயணம்
நீலட்டும்
என பிராத்திக்கும்
மனது ...
ஏன் என்று கேட்டால்
கவர்ந்திழுக்கும்
சுற்றுசுழல்
ஒரு புறம் இருக்க ..
மறுபக்கம்
என் உள்ளம்
கவர்ந்தவனுடன்
கை கோர்த்து
தோல் சாயந்து
நடந்து செல்லும்
அச்சில மணி
நேரம்
என்றும்
என் மனதின்
மூலையில்
பசுமையாய்
நிலைத்திற்கும் ….

Tuesday, September 11, 2012

சிசு கொலை

பிறந்தது
பெண் என்று
கொல்ல துடிக்கும்
உன் புத்திக்கு
எட்டவில்லையா ..
நீயும்
பெண்
உன்னை
சுமந்தவளும்
பெண் என்று …

கேட்டால்
வறுமை …
உன் வறுமை
நீ அறிந்தது …

பிறர் சொல்லி
அறியப்படபோவது
இல்லை ..

அப்படி இருக்கையில்
நீ உன் சந்தோஷத்துக்காக
கருவுற்று …
பெண் என்று
அழிக்கிறாய் !

ஆண் பிள்ளை
பிறந்து இருப்பினும்
வளர்த்து இருப்பாயே
அப்போது எங்கு சென்றது
உன் வறுமை …

இல்லை இல்லை …
வறுமை தான்
ஆண் /பெண்
எதுவாயினும்..
என்று சொல்வாயனில் ..
கேட்டுக்கொள் ..

நீ ஒரு
சுயநலவாதி …
உன் சந்தோஷத்திற்காக
வாழ்பவள் ...
நீ திரும்பவும்
கருவுற்று …
அழித்துக்கொண்டே
இருப்பாய் …
பல சிசுக்களை ..
.
உன்னை
போல் ஒருத்தி
இப்பூமிக்கு
என்றும்
பாரமாய்
நம் எல்லோரையும்
சுமக்கும் நம்
பாரத தாய்க்கு
ஒரு அவமான
சின்னமாய்
விளங்குவாய் ...
என்பதில்
சந்தேகம் இல்லை
.. அத்தகு பாவ
செயலுக்கு நீ

உன்னையே மாய்த்துகொள்...
பல சிசுவேனும்
மிஞ்சும்!!!!


என் தாய்!!!!

நான் அறிந்த 
என் தாய்க்கு 
நாங்கள் தான்
உலகம்!!!

அவளது உலகத்தில்
நால்வர் தான்!!

அப்பா அண்ணன்
  நான் என் தங்கை..
தெய்வம் கூட
எங்களுக்கு 
பிறகு தான் 

எங்கள் கண்களால்
  உலகை 
கண்டவள்...

இன்று 
விதியின் 
வலியால் 
உலகை பார்க்கிறாள்
  அவளது 
கண்களால்...

சற்றே வித்தியாசமாய் 
இருப்பினும்
பழகி கொண்டு
கற்று தேர்கிறாள்..

எங்களின் நலன் 
கருதி..

இப்படியான அன்பு
  கிடைக்கபெற 
நாங்கள் செய்த 
புண்ணியம் 
புலப்படுகிறது..
இப்பிறவி 
அல்லாமல்
முர்ப்பிரவி பயனும்!!!

Friday, August 10, 2012

விதவை

கண் முன்
குங்குமம் இருக்க
கைகள் தொட
நடுங்குகிறது
காரணம்
சமூகத்தினர்
எனக்கு
சூட்டிய பட்டம் ..
தெரிந்தோ தெரியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
பட்டம் பெற்று விட்டேன்
அதை மீறும்
மன தைரியம்
இல்லாமல் போனது எப்படி ...

கூப்பிடும் பெயர் கழுதையோ
என்றாலும் ...
கூபிடுபவர் கூப்பிட்டால்
இனிக்கும் ...

இனிக்கும் பெயர்
என்றாலும்
பிடிக்காதவர் கூப்பிட்டால்
கசக்கும்....


Tuesday, August 7, 2012

நான் பெற்ற வரம்

பெண் என்பவள்
விட்டின் நிலைப்படியை
தாண்ட விடாது
வளர்க்கும்
பெற்றவர்களின் நடுவே!!
என் கிராமத்தின்
நியதிகளுக்கு ஊடே!!

பெண் என்பவள்
அடுகடியில்
வாழ பிறந்தவள் அல்ல
என் விட்டின் ராணியாய்
வாழ்கையை அனுபவிக்க
பிறந்தவள் என்று!!

உலகை
வளம் வர
வாழ்த்தி
வழி அனுப்பும்
பெற்றோர் கிடைத்தது
முற்பிறவியில் நான்
செய்த பலன்
இப்பிறவியில்
நான் பெற்ற வரம்!!


கண்மணியே!!!!

இசை!!!

இசை …
கவிஞர்
உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
கொடுக்கப்படும்
உயிர் ..

முத்தாய் உதிரும்
வார்த்தை கொண்டு
தொடுக்கப்படும்
அழகிய
மணி மாலை …

பூவாய்
மணம்வீசும்
சொற்களால்
ஆனா
மலர் சரம் …

இப்படி பல
பரிமாணங்களில்
வடிக்க பட்ட
சிற்பத்திற்கு
உயிர் தரும்
உன்னத கலை
இசை ...

-------------------------------------- இசை
எல்லோராலும்
உணரப்பட்டு
நேசிக்கப்படுகிறது
வெவ்வேறு பரிமாணங்களில்…

பார்வை அற்றவனுக்கு
கேட்கும் நாதம்
எல்லாம் இசை

காது கேட்கதவற்கு
உணர படும்
சிறு அசைவு கூட
இசை …

குழந்தைக்கு
தாயின் தாலாட்டு இசை
தந்தையின்
பேச்சு இசை …

கணவனுக்கு
மனைவின் அன்பு
இசை

மனைவிக்கு
கணவனின் அன்பு
இசை ..

காதலனுக்கு
காதலியின்
சிணுங்கள்
இசை …

காதலிக்கு
காதலன்
சொல்லும் பொய்
இசை ..

நட்புக்கு
குலுக்கும்
கை ஓசை
இசை ..

இசை என்னும்
இன்ப நதியில்
பலரை போல்
நானும்
நான் ரசிக்கும்
இசையோடு
கை கோர்த்தபடி
என் பயணம் தொடர்கிறது ...
----------------------------------
-------
அல்ல சிற்பியின்
சிலையை
உயிர் பிப்பது ...

இசை
சொற்களின்
உயிர் வடிவம் …
கேட்கும்
மனதை
அசைக்க முடியாமல்
கட்டி போடும்
மாய வலை ..

மனதில்
ஆயிரம் யோசனை
வலி
இருபினும்
நம்மை
மறக்க செய்யும்
மாயகோல் ..

இசை ..
யாரோ நம்மை
மடி மேல் வைத்து
தாலாட்ட …
தோல் மேல் சாய்த்து
சீராட்ட ….
கை பிடித்து
நடந்து செல்ல …
நிலவை பார்த்து
மயங்கி நிற்க
வானம் பார்த்து
கிறங்கி நிற்க
மழை கண்டு
துள்ளலிட
விண்மீன் கண்டு
முத்தமிட
பனித்துளியாய்
வெட்க பட
அந்தி மாலை
சூரியனாய்
சிவந்து நிற்க ..
வைக்கிறது
என்னில் இருக்கும்
இசை!!!

Monday, August 6, 2012

மழலைகளின் சிரிப்பில் ….

குழந்தைகளின்
கூச்சலில் ..
கொஞ்சலில் ..
சிணுங்களில் ...
அழுகுரலில்
என்னை தொலைத்து
நிற்கிறேன் …

சுகமாய்
சொல்லவேண்டும் எனில் ..

மனதின்
குமுறல்களை
சோகங்களை ..
வேதனைகளை

மறந்து
புதியதாய்
பிறந்து நிற்கிறேன் ...
மழலைகளின்
சிரிப்பில் ….

Friday, August 3, 2012

மன்னிப்பு

என்னை
மன்னிப்பாயா
தோழனே ..
அன்பான
நண்பனின்
பிறந்தநாளை
மறந்தமைக்கு …

நேரம் கடந்து
வாழ்த்த வந்துள்ளேன் ..

இந்த தோழியின்
மன்னிப்பை
ஏற்றுகொள் ..

இதோ
உனக்காக
நான் தொடுத்த
மலர் செண்டு
உன் கை
கொண்டு சேர்க்க
என் மனம்
விழைகிறது…

இதோ
மலர்ந்து சிரிக்கும்
பூவை போல்
என்றும்
உன் முகம்
புன்னகை
பூக்களால்
மலர்ந்து சிரிக்கட்டும் ..


என்றும்
உன்னை வழி
நடத்தும்
தாய் …
உன்னில் வாழும்
உன் தந்தை
நீ தினம்
துதிக்கும்
இறைவன்
உன்னை நேசிக்கும்
உறவுகள்
நட்புகள்
இருக்கும் வரை
எதிலும் வெற்றி பெற்று
என்றும்
சந்தோஷமாய்
இருக்க நான்
வணங்கும் இறைவனை
வேண்டி நிற்கும்

உன் அன்பு
தோழி
மாலா!!!!

Sunday, July 15, 2012

Mudhal kadhal!! In 2006

வெள்ளியாய் சிரித்து
தெருவை வலயவந்தவள்
இன்று
மூலையில் முடங்கி கிடக்கிறாள்
காரணம்
தன் உள்ளக்கணவனாய்
குடியேறிய
காதலனின் திருமணம்
நடக்கிறது என்று....

எங்கோ கேட்கும்
ஓடையின் சலசலப்பு
பறவைகளின் சங்கீதம்
அதனுடன் கலந்து
செவியை எட்டுகிறது
"கொட்டி மேளம் ".....

ஏதோ உணர்வு தோன்ற
தெருவீதியை பார்கிறேன்
மனபெண்ணோடு திருமண
கோலத்தில் முன்னால் காதலன்!!!

இவள் கண்களில்
கண்ணீர் பொங்குகிறது
அவன் இமையோரம்
கண்ணீர் துளிகள்
இருவர்க்கும் இடையே
கண்ணீர் பேசுகிறது..
இதயத்தின் ஏதோ
ஓர் ஓரத்தில்
என்னை வைப்பாயா???

Saturday, July 14, 2012

சிறகுகளை வெட்டிய
பறவையாய்...

சொந்தம்
பாசம்
நேசம்
நட்பு
வேலை
பக்தி
இப்படியாகிய கூண்டிற்குள்
அடைப்பட்டு கிடக்கும் என்னை

என்னை என் போல்
பரக்க (மோட்சம் ) வைக்க போகும்
உங்களை
இரு கரம் கொண்டு வரவேற்க
காத்துக்கிடக்கும்
பேதை பெண் இங்கு !!!!!

முதல் காதல்!!!

Written in 2006...
முதல் காதல்...
அழகாய்
அழுகிறேன் நான்
காரணம் தெரியவில்லை
ஆசையோடு
அணைத்து முத்தமிட்டு
முதல் காதலை
வெளிக்கொல்கிறார்
தந்தை தன் குழந்தை
பிறந்தது என்று...

நட்பு!

Written some where on 2006 நட்பு என்பது மூன்றெழுத்து
அதற்கு
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சிந்தனைகள்
உணர்ச்சிகள்
அதனால்
ஆயிரம் ஆயிரம் வெறுப்புகள்
வேதனைகள்
மனஸ்தாபங்கள்
சஞ்சனங்கள்
இது மாறுமா???

நட்பு
அன்பினால் உருவகிக்கப்பட்டு
பாசத்தினால் உயிர்கொடுகப்பட்டு

ஆணுடன் என்றாலும்
பெண்ணுடன் என்றாலும்
அதை
கலங்க படுத்துவதற்கோ
ஏளனம் செய்வதற்கோ
இம்மண்ணுலகில் பிறந்த
எந்த உயிர்க்கும்
கிடையாது.....

Tuesday, June 26, 2012

கண்ணீர்!!

கண்ணீர் சிந்துவது
ஆண் என்றால்
பாவம் எவ்வளவு துக்கம்
இருந்தால் அழிகிறான்
என்று சொல்லும் உலகம் ...

பெண்ணின் கண்ணீரை
அது வலியும் வேதனையால்
வந்தது எனிலும்
அதை ..
நீலி கண்ணீர் ..
இம் என்றால் கண்ணீர் ..
வேஷம் இடுகிறாள்...
நாடகம் போடுகிறாள்...
என்று இன்னும்
பல பரிமாணங்களில்
பெயர் அளிக்கப்படுவது
ஏன்??

வலி என்பது
ஆண் பெண்
பொதுவான ஒன்று
இங்கே எதன்
அடிபடையில்
பிரிக்கபடுகிறது????

நித்தமும்
இறைவனின் திருநாமம்
வேண்டும் தங்களுக்கு
எக்குறையும் இன்றி
வெற்றி பெறுவாய்
நீ மேற்கொண்டுள்ள
இப்பயணத்தில் ..

யாரும் இல்லை
என்று வருந்த வேண்டாம் ..
நொடி பொழுதில்
உலகை சுற்றி வரும்
நம் மனது …
நேசித்த அன்பு உள்ளங்களை
உன் மன கண்முன் கொண்டு சேர்க்கும்..

அதுற்கு மேலும்
சிந்திக்க செயல்பட
நீ வாசித்த புத்தகங்கள் வழி சொல்லும் …

நினைத்து மகிழ
தந்தையின் அறிவுரைகள்
தாய் மடி தூக்கம்
தங்கை குழந்தையின் சிரிப்பு
நண்பர்களுடன் கழித்த பொழுதுகள்
சென்ற இடங்கள்
வணங்கிய தெய்வங்கள் ..
உண்ட உணவு
கண்ட கனவு
இப்படி பல இருக்கையில்

தனிமையின் துயரை
தூக்கி எரி தோழா ...
தோழியை உன் புத்தகம் இருக்க
தோழனாய் உன் மடி கணினி இருக்க
எதை கண்டும் அச்சம் தேவையில்லை

துணித்து எதிர்நோக்குங்கள்
தங்களுது
இந்த பயணத்தால் ஏற்பட போகும்
வெற்றி மாலையை
வாங்கிக்கொள்ள!!!

இங்கனம்:
அன்பு தோழி
மாலதி

Tuesday, June 12, 2012

என் மனதின்
அழுகுரல்
யாருக்கும்
கேட்காமல் இருக்க ....

வரவைக்க பட்ட
சிரிப்பின் ஒளியால்
மறைத்து வாழ
பழகிக்கொண்டேன்!!!!

மயக்கம்

நீ உறங்குவது
உன் வீட்டு
பஞ்சணையில் அல்ல..

மக்கள்
நடமாடும் தெருவீதியில் ...

அதுபோல் நீ
வேலை மிகுதியால்
கலைத்து உறங்கவில்லை ..

உன் உறக்கத்திற்கு
காரணம்
அளவுக்கு அதிகமாய்
உட்கொண்ட மதுவின் மயக்கம் ..

நீ யார் எங்கு இருக்கிறாய்
என்பதை மறப்தற்கு.....

உன்னை நம்பிய
உன் குடும்பமும்
விரைவில் உன் நிலையில்!!


நட்பின் ஆழம்

நட்பு என்னும்
வரமும்
எனக்கு இல்லாமல்
போனது ஏன் ????

நான் நம்பும் சிலர்
என் நம்பிக்கையை
பொய் ஆக்கினர்..

நான் விரும்பிய சிலர்
என் அன்பை
கொச்சை படுத்தியர்...

எனக்கு வரம்
என கிடைத்த சிலர்
என் அருகில் இல்லை …

என் புனர்ஜென்ம வினையா??
கேட்டு பார்க்கணும் ..

யாரிடமேனும் …

அப்படி நான் செய்த
பாவம் என்ன ..
இந்த ஜென்மத்தில்

என்னை இப்படி
துரத்தி துரத்தி
வதைக்க ….


நிறைவேறாத ஆசை



நான் ஆசை பட்ட எதுவும்
நடந்தது
கிடையாது இன்று வரை ..

தெரிந்தோ தெரியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
எல்லாம் திணிக்கப்பட்டது..
என்மேல்!!!!!

திணிகபட்டதை
விருப்பமாக்கி வெற்றி பெற்று இருக்கிறேன்
இந்த நொடி வரை ….

நானாய் ஆசைப்பட்டது
விரல் விட்டு என்ன குடியவை …

நடந்தது / நிறைவேறியது
ஜீரோ....
மனதின் ஓரத்தில் ..
பெரும் சுமையாய்
என்றும் நினைவில்
ஒரு வடுவாய்..

எத்திசை திரும்பினும்
பசுமை பசுமை பசுமை !!!!!!
இயற்கை எழில் பொங்கும்
அழகிய மலைத்தொடர்
பூத்து குளுங்கும்
பெயர் அறியா பூக்கள்....
எங்கும் மனம் பரவும்
மலர்ந்த ரோஜாவின் வாசம்...
எறும்பின் அணிவகுப்பை
நினைவுப்படுத்தும்
தேயிலை விவசாயிகள்
அப்பொழுது பறித்த
பழமும் காய்கறிகளை
நமக்கான விற்பனையில்
வியாபாரிகள்...
போகும் இடமெல்லாம்
சுற்றி வரும்
புகைபடகாரர்களும்
டூரிஸ்ட் வழிகாட்டிகளும் ....
இது மட்டுமின்றி
ஜாதி மொழி
பேதம் இன்றி
இயற்கையை ரசிக்க
வந்து குவியும்
மக்களினத்தை
கொடை தாய்
இரு கரம் தழுவி
நம் வரவை
வரவேற்க காத்து நிற்கிறாள்...

எங்களை மகிழ்விக்க
வரும்
தங்கள் வரவை
இந்த
அழகிய மேடை
எதிர்நோக்கி காத்து கிடக்கிறது...

Monday, June 4, 2012

அல்ல யாரை தொட்டுவிட
இந்த வேகம் …
இறைவனின் படைப்பில்
இப்படியும்
சிறகுகளை வெட்டிய
பறவையாய் …

யாரை கண்டு விட்டாய் அலைமகளே ..
அல்ல காண போகிறாயா
சந்தோஷத்தில்
இப்படி வெட்கத்தோடு ஓடுகிறாய்
துள்ளி திரிகிறாய் ..

Tuesday, May 22, 2012

இதுவரை
எனக்காக இதை செய்
கேட்டது உண்டா உன்னிடம் ??
ஒரு முறையாவது …
கண்டிப்பாக இல்லை ….
கேட்டது எல்லாம்
என் பெற்றோரின்
உடல் நலம் நன்றாக இருககோரி ?
அப்படி ஆனால் …
என் வேண்டுதல்
பலிக்காமல் இருக்க
நான் செய்த பாவம் என்ன ?

நான் ஏன் எப்படி ஆனேன்…
வெளியில் பலராலும்
தைரியசாலி
திறமைசாலி
திறம் பட பேசுபவள் ..
மனதில் நினைப்பதை சொல்பவள் ....
இப்படி பல பரிமாணங்களில் வாழ்பவள் ..
என் குடும்பத்தின் முன்னினையில் …
இது எல்லாம் ஊசி குத்தின
பல்லூனாய் போகிறது ..
எல்லோர் வாழ்கையிலும்
வர கூடிய ஒன்று ….
முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம் …
எனக்கு விருப்பம் இன்றியும்
என் குடும்பத்துக்காக
தலை குன்னிந்து நிற்கிறேன் …

எது எனக்கு வேண்டாம் என்றேனே
எது என்னை வாட்டி வதைகிறதோ ..
எது செய்ய என் மனம் விழைய வில்லையோ …
இதோ அதையே செய்ய நிற்கிறேன்
என் தாய் தந்தையரின்
நிம்மதிக்காக…
என் மனதின் வலியை
வரவழிக்கபட்ட சிரிப்பால் மூடி மறைத்து கொண்டு நிற்கிறேன் …..

Thursday, May 3, 2012

இப்படியும் மனிதர்களா?

இப்படியும் மனிதர்களா?

சூரியன் புலரும் முன்
இரவு முழுதும்
காய்ந்த வயிற்றுக்கு
கிடைத்த பழைய கஞ்சியை
ஊறுகாவுடன் அருந்திவிட்டு
ஆண்கள் கையில் கலப்பையுடன்
பெண்கள் அன்றாட வேலைகளோடு
மத்த எல்லா ஜீவராசிகளும்
அதன் அதன் வேலையில்
ஒரு ஜான் வயிற்றுக்கு
உழைக்கும் போது
இன்னும் சில உயிரினங்கள்
மனிதன் என்று சொல்லி கொண்டு
பொழுது புலரும் விடயலை நோக்கி
தவம் கிடக்கிறார்கள்
மது கடை முன்னே....
கையில் மது கிண்ணத்துடன்
இரவு பகல் தெரியாமல்
விழுந்து கிடக்கும்
இவர்களின் பாவ செயலை
மன்னிக்கும் பெண்கள் இருக்கும்வரை
இப்படியும் ஜீவ ராசிகள்
இப்பூமியின் பாரமாய்
உயிர் வாழ்வது எதற்காக ??

Wednesday, March 21, 2012

மழை

மழை
சுகமானது ,
இன்பமானது
மழையை நேசிபவர்களுக்கு …
தூரத்தில் நின்று ரசிப்பவர்களுக்கு…


அதுவே ஆபத்தானது , ஆபயமனது ……
மழையில் ஒதுங்க கூறை இன்றி
நனைந்து துடிபவர்களுக்கு..

ஏன் இந்த வேற்றுமை ….
இன்புறுவர் இன்புறுவது ஆகட்டும் ….
துன்புறுவர் துன்புறுவது ஆகட்டும்…

என்று மாறும் இந்த நிலை...
மாறும் என நர்பாசயுடன்
காத்துக்கிடக்கும்
ஜீவராசிகளில் ஒருத்தி...

மாறுவது எப்போது???

கையில் சிலேட்டுடன்
பல்பம் பிடிக்க வேண்டிய கைகள்
சுத்தியல் பிடிப்பது ஏன்????

தன் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில்
தனக்கென்று ஒரு வாரிசை பெற்று ..
பள்ளிக்கு அனுப்பும் வயதில்
பட்டறைக்கு அனுப்புவது ஏன் !!!!!
கேட்பார் யாரும் இன்றி
வதை படும் சிறார்களின் நிலை என்ன ??

முதலாளித்துவம்:

முதலாளித்துவம்:
அக் குழந்தையின் சிரிப்பை
ஒரேடியாக வாடவைக்கும்
நல் உள்ளங்களை நாம் இங்கு பாரட்டியே ஆகவேண்டும் ….
அதற்கு சன்மானமாக வேண்டி
அவர்களுக்கு
ஓர் இடம் கொடுத்திடவேண்டும் …
நரகத்தில்.......

Monday, January 23, 2012

மாறுவது எப்போ ????

இன்று வரை விளங்கவில்லை
ஒரு உண்மை …

பெண் பார்க்க வருவது
பார்த்த பின்
தகவல் தெரிவிக்கிறேன்
என்று
வந்ததிற்கு டி யோ காபி யோ
அருந்தி விட்டு செல்வது …

இது ஒவ்வொரு பெண்ணின்
வீட்டில் சாதரணமாக நடக்கும் ஒன்று !!!

ஆனால் பெண்ணின் நிலைமை என்ன ????????????

யாரோ வருகிறார்கள் என்று அப்பா சொல்வார்
இந்த புடவை நகை உடுத்தவேண்டும் என்று அம்மா
இப்படி அலங்காரம் என்று உடன் பிறந்தவள்
அப்புறம் விட்டுக்கு அழைக்கப்பட்டு இருக்கும் உறவினர்..

இப்படி பல விதமான செய்திகள் ….

எல்லாம் முடிந்து வருபவர்கள் முன்
தலைகுனிந்து வணக்கம் சொல்லி அமரனும் ..
வந்தவர்கள் …
பெண்ணின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ..
சோதனை செய்வார்கள் ,…
அது மட்டுமா
சமயல் ,கோலம் ,பேச்சு ஆகியவை பற்றிய விசாரணை ….
முடிந்ததா என்று கேட்டால் இல்லை என்று சொல்வேன் ….


ஊரில் பெரியவர் என மதிக்க படும் என் தந்தை …
வந்தவர்கள் முன் யாரோ போல் உட்கார்ந்திருப்பர் ..
காரணம் அவர் பெண்ணை பெற்றவர் ….
இது என்றும் மாறபோவது
இல்லை என புலப்டுகிறது…

எல்லாம் சுகமாய் முடிந்தது
என்று வழி அனுப்பி வைப்பார்கள் ....

பெண்ணின் திருமணம் நாள் நிச்சயிக்க பஞ்சாங்கத்தோடு அமரும் தந்தை ….
சீர் பற்றி யோசிக்கும் தாய்..
பணம் பற்றிய சிந்தனையில் தமயன்..
அக்காவின் திருமண நாளை கனவில் காணும் தங்கை ...

ஆனால் இடி என திரும்பி வந்தது ..
அனுப்பிய புகைப்படமும் , ஜாதகமும் …

ஏன் என்றால் ..ஏதோ ஒரு காரணம் …

பெண்ணை பெற்றவர்களின் வலி
என்ன என்று தெரியும்????

அது நாளை வந்தவனுக்கு
கல்யாணம் என்று ஒன்று நடந்து
பெண் ஒன்று பெற்று
திருமணம் செய்யும் போது அவ்வலி புரிபடும்!!!!

இதில் தவறு யாரிடம்???
பெண்ணிடம்?
இல்லை
அவளை பெற்றவர்களிடம்??

இரண்டும் இல்லை என்பேன்...

இன்றைய சமுதாயத்தில்
ஆண்கள் செய்யும் அராஜக செயல் யாதெனில் ..

நான்கில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று …
இப்படியாக ஒரு வியாபாரம் …

அனைத்திற்கும் தான் ஆண்மகன் என்ற இறுமாப்பு …
அவர்களுக்கு என்ன
இது இல்லை என்றால் மற்றொன்று....

ஆனால் பெண் விட்டின் நிலைமை …

பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கு தான் வலியும் வேதனயும் …
பெண்ணிற்கோ இரண்டு பக்கம் ..
ஒன்று குடும்பத்தாரின் வலி ...
மற்றொன்று நிராகரிக்க படுவது ...
இவ்விரண்டை விட கொடுமை இந்த உலகில் வேறு ஏதும் இல்லை என்று யாவரும் அறியோம் ..

இப்டியாக நான் ஒட்டு மொத்த ஆண் இனத்தையே குற்றம் சொல்ல வில்லை …
ஏன் என்றால் நல்லவர்களும் இருகிறார்கள் ..
என்னை பெற்று வளர்த்தவரும் உடன் பிறந்தவனும் ஆண் தானே …

சமுதாயத்தை சீர் படுத்தும் முயற்சியில்
பெண்கள் எல்லாம் அன்று பாரதி கண்ட புதுமை பெண்ணை வளம் வர செய்து
தலை நிமிர்ந்து நடக்க பழகி கொடுத்தவர்கள் …
இன்றைய சமுதாயத்தில் எனக்கென்று ஒரு வழி கற்று கொடுத்தவர்கள்
என் சுய சிந்தனைகளை ஊக்குவிப்பவர்கள். .

இப்டியாக ஒரு பெண்ணை வழி படுத்தும் தந்தையும் தமையனும் எங்கே ...

பெண்களை ஈனத்தனமாக மதிக்கும் மனித பிறவிகள் எங்கே …
அப்படி நினைபவர்களுக்கு சமுதாயத்தில் என்ன பெயர் ????

எத்தனை பாரதி பிறந்தாலும் இவர்களை திருத்தமுடியுமா
என்று கேட்டால் ..
முடியவே முடியாது என்று
என் பெண்மை எரிமலையாய் எழும்பி நிற்கிறது …

படித்த பெண்களின் நிலைமையே இதுவெனில் …
படிப்பு வாசனை இன்றி

எங்கோ கிராமங்களில்
விட்டின் வாசலை தாண்டி
வெளி வர முடியாமல்
வாழும் பென்னிகளின் நிலை என்ன??

மாபெரும் கேள்வி குறியாய் கண்கள் முன் தெரிகிறது???????????

Saturday, January 21, 2012

காற்று

மயில் தோகையால் வரடுவது போல்
உன் சில் என்ற தென்றலால்
மனதின் சுமைகளை தூக்கி செல்கிறாய் …

மழை

சில்லென்ற சாரலாய்
பூமியை முத்தமிட்டு செல்கிறாய்