Tuesday, May 18, 2010

அநாதை இல்லம்!!!!!

தாலாட்ட தாய் இல்லை
சீறாட்ட தந்தை இல்லை
பாசம் கொள்ள தமையன் இல்லை
வம்பு பண்ண தம்பி இல்லை
உடன் பயில தோழன் இல்லை
பகிர்ந்து கொள்ள தோழி இல்லை
அறிவுரை சொல்ல ஆசான் இல்லை
என் எனில்
உண்ணுவது அறிய கண்
இல்லை
மனதில் உள்ளது
பகிர்ந்து கொள்ள
பேசும் திறன் இல்லை
கேட்டு மகிழ கேட்கும்
திறன் இல்லை
ஓடி விளையாட கால்கள் இல்லை
இப்படி ஏதும் முழுமை
இல்லாத உயிரை
படைக்க கடவுள் யோசிகவில்லையோ....
யோசித்தார் என நினைக்கிறன்
முடங்கவாவது ஒரு இடம் தந்துள்ளார்...
பணம் இன்றி
நடத்த துடிக்கும்
நல் உள்ளத்தின்
அநாதை இல்லத்தில் !!!!