Tuesday, May 4, 2010

ரசித்தது!!!

தெரு பாட்டுக்காரன்
வெகு ஜன இரைச்சலின்
ஊடேயும் தேன் குரலில் காதில் வந்து
பாயும் உன் கானங்கள்
கொடுக்கும் மகிழ்ச்சிக்கு
நன்றி சொல்ல
வார்த்தைகள் உண்டு
ஆனால் என்னிடம்
வாய் இல்லை
கை கூப்பினேன்
பார்க்க உன்னிடம்
பார்வையே இல்லை.