இரண்டு முறை பிரகாரம்
சுத்திவிட்டு கால்வலிக்கிறதென்று
குழந்தை
சாய்ந்தது அரச மர நிழலில்...
கோவிலைச் சுற்றஅழைத்த அம்மாவின்அழைப்பை
நிராகரித்தபடி.
புரியாமல்கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள் தாய் ....
குழந்தையிடம் கெஞ்சுகின்றசுகத்தை
கடவுளிடம் பெறமுடியாதென
அவளுக்கு சொல்ல
எழுந்தேன் பிரகாரத்தைவிட்டு!!