அவள் இழந்த குங்குமத்தை
விலை கொடுத்து வாங்க இயலாது …
அவள் பெற்ற அன்பை , சந்தோஷத்தை
அவறின்றி யாரும் தர இயலாது
அவளின் குழந்தையை
அவறின்றி யாரும் தூக்கி விளையாட இயலாது
அவளின் கண்ணீரை துடைக்க
அவரின் இழப்பை சரி செய்ய
வழி இன்றி தவிக்கிறேன் …
இயலாமை என்னை வாட்டி வதைக்கிறது
சமுதாயத்தின் பார்வையில்
அவள் ஒரு விதவை …
ஆனால் அவளோ மூன்று பிள்ளைகளின் தாய் …
அன்பென்ற கடலில் வாழ்கையை கடந்த அவள்
கணவன் என்னும் துடுப்பை இழந்து ….
தத்தளிக்கிறாள் நடுகடலில்!!!!!!!!!
கரை ஏற முயல்கிறாள்
அவளை சுற்றி உள்ள சமுதாயத்தின்
ஏச்சு பேச்சுக்களை சுமந்து …
அதன் ஊடே
அன்பை மட்டுமே தந்த
கணவனின் இறப்பை
ஜீரணிக்க முடியவில்லை
வாழவும் பிடிக்கவில்லை
கணவன் இல்லாத உலகில் …
சாகவும் துணிவுவரவில்லை
பிள்ளைகளின் சிரித்த முகம்
தடையாகிறது ….
இப்படியாக
பிள்ளைகளை தோளில் சுமந்து
அவர்கள் முழ்ககூடாது என்று ..
அவளது கணவனின்
பிரிவுக் கண்ணீரும் அக்கடலில் சேர்ந்து
முழ்கிதவிகும் அவளை கரை சேர்க்க
எங்கும் நிறைந்திருக்கும்
அவள் கணவனின் ஆத்மா
அவளுக்கு மன தெய்ரியத்தையும்
நிம்மதியையும் தர வேண்டுவோம் …