மின் விசிறி:
உன் சுவாச காற்றில்
துயில் உறங்கும் என்னவன்
விழித்தெழ போகிறான்
உன்னில் இருந்து வெளி வரும்
கானத்தால்.....
உன் இனிய கானத்தை
என்னவனுக்காக மறைத்தால்
உனக்கான என் அன்பு
இரட்டிப்பாகும்...
இல்லையேல்
உன்னை அமர்த்தும் கருவி
என்னிடம் உள்ளதை
நினைவில் வை......